search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐகோர்ட்டு விசாரணை"

    ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிரான வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். #Jayalalithaa
    சென்னை:

    சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டினால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மெரினா கடற்கரையில் அரசு சார்பில் நினைவிடம் கட்டக்கூடாது. அரசு அலுவலகங்களில் அவரது புகைப்படம் வைக்கக்கூடாது. அரசு நலத்திட்டங்களுக்கு அவருடைய பெயர் சூட்டக்கூடாது என்று தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன், டிராபிக் ராமசாமி, வக்கீல் துரைசாமி உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.



    இந்த வழக்குகள் கடந்த ஏப்ரல் 2-ந் தேதி விசாரணைக்கு எடுத்தபோது, மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, இந்த வழக்குகளை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஏ.செல்வம் ஆகியோர் உத்தரவிட்டனர்.

    இந்த உத்தரவை திரும்பப் பெற்று, இந்த வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுக்கவேண்டும் என்று மனுதாரர்கள் சார்பில் தனித்தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மனுக்களை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் இந்த வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறினர். வருகிற 8-ந்தேதி வழக்குகளை விசாரிப்பதாக உத்தரவிட்டனர். 
    ×